தமிழுக்கு கயாடு லோஹர் சொன்ன காரணம்

டொவினோ தாமஸ் ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படம், வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கயாடு லோஹரிடம், ‘இன்னும் தமிழில் சரளமாக பேச கற்றுக்கொள்ளவில்லையா?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இப்போது நான் பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறேன். நான் தென்னிந்தியாவை சேர்ந்தவள் இல்லை. என்னால் முடிந்தவரையில் ஒவ்வொரு மொழியையும் பேச முயற்சி செய்கிறேன். வெவ்வேறு மொழிகளில் நடிக்கும்போது, அதன் மையமே அம்மொழியை பேசுவதுதான். நான் ஒவ்வொரு மொழியையும் பிழையின்றி கற்றுக்கொள்ள 100 சதவீதம் கடுமையாக உழைக்கிறேன். இன்னும் சிறிது அவகாசம் கொடுங்கள்.

பிறகு நான் தமிழ், மலையாளம் உள்பட பிற மொழிகளிலும் சரளமாக பேசுவேன்’ என்றார். அவரிடம், ‘தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன்?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கயாடு லோஹர், ‘நான் மிகச்சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்பி வந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘டிராகன்’ வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பும், ஆதரவும் மிகவும் பெரிது. இன்னும் விதவிதமான கதைகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்தவுடன் அதுபற்றி அறிவிப்பேன்’ என்றார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வரும் அவர், தமிழில் ‘இம்மார்ட்டல்’, ‘இதயம் முரளி’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். வெப்தொடர்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக சொன்னார்.

Related Stories: