தடயவியல் நிபுணர் வேடத்தில் பாவனா

கடந்த 23 வருடங்களாக நடித்து வருபவர், பாவனா. அவரது 90வது படம், ‘அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத்’. திரில்லர் படமான இதை ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார். வழக்கமான குற்றவியல் திரில்லர் எல்லைகளை தாண்டி, பேரலெல் இன்வெஸ்டிகேஷன் என்ற தனித்துவமான கதை சொல்லும் முறையில் அதீத உணர்ச்சிகளும், பதற்றமும் கலந்த திரைக்கதை இடம்பெற்றுள்ளது. ‘சாரா’ என்ற புத்திசாலித்தனம் கொண்ட தடயவியல் நிபுணராக பாவனா, விசாரணை அதிகாரியாக ரஹ்மான் நடித்துள்ளனர். மற்றும் பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா, அர்ஜூன் லால், ஷெபின் பென்சன், திரிஷ்யா ரகுநாத் நடித்துள்ளனர்.

டி சீரிஸ் பிலிம், பனோரமா ஸ்டுடியோஸ் சார்பில் குமார் மங்கத் பாதக், அபிஷேக் பாதக் வழங்குகின்றனர். ராஜேஷ் மேனன், ராம் மிர்சந்தானி, நிதின் குமார், மன்சூத் டி.பி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர். பிளிட்ஸ்கெர்க் பிலிம்ஸ், ஏபிகே சினிமா, பாவனா பிலிம் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரும் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்ய, ஆக்‌ஷன் சந்தோஷ் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். கிரண் தாஸ் எடிட்டிங் செய்துள்ளார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமான ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசை அமைத்துள்ளார்.

Related Stories: