ஒன்றிய அரசு 21 நாட்களில் டீசல் விலையை குறைக்காவிட்டால் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு

நாமக்கல்:  நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் நேற்று, தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (சிம்டா) நிர்வாகக்குழு கூட்டம்நடைபெற்றது. கூட்டத்துக்கு பின் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் விற்பனையாகும் மொத்த டீசலில் 78 சதவீதம், லாரி உரிமையாளர்களால் வாங்கப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை உயர்ந்துள்ளது. இதனால் லாரித்தொழில் மிகவும் மோசமடைந்துள்ளது. 6 தென் மாநிலங்களில் 26 லட்சம் லாரிகள் உள்ளன. இதில் தற்போது சுமார் 7 லட்சம் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு ஒரே விலையை, 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யவேண்டும். கொரோனா 2-வது அலையால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் தவனை தொகையை செலுத்த மேலும் 6 மாத காலஅவகாசம் அளிக்கவேண்டும். இந்த கோரிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் 21 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி, சங்கத்தின் அவசர கூட்டத்தை கூட்டி, தென்மாநிலங்களில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றார்….

The post ஒன்றிய அரசு 21 நாட்களில் டீசல் விலையை குறைக்காவிட்டால் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்: உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: