பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறியது, தடுப்பூசி பற்றாக்குறை, அதன் விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளிபிரதமர் மோடி உரையாற்றத் தொடங்கியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பிரதமர் நரேந்திர மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கம் எழுப்பினர். பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர். பிரதமர் மோடி காட்டம்: புதிதாக பொறுப்பேற்றுள்ள பல அமைச்சர்கள் விவசாயிகளின் பிள்ளைகள். பட்டியலினத்தவர், பெண்களை அமைச்சர்களாக நியமனம் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அமளியில் ஈடுபடுவதாக பிரதமர் புகார் தெரிவித்தார். தன்னை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி செய்ததால் பிரதமர் மோடி கட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து அமளி செய்ததால் அமைச்சர்களை அறிமுகம் செய்யும் தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினராக பதவியேற்றார் விஜய் வசந்த்நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், மக்களவை உறுப்பினராக விஜய் வசந்த் பதவிபேற்றுக்கொண்டார். சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழில் பதவியேற்றுகொண்ட விஜய்வசந்த், பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜுவ் காந்தி வாழ்க என்று, பதவியேற்றபின் குறிப்பிட்டார். மக்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்ட விஜய் வசந்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்தார். …

The post பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: