இந்திய தொடரில் இருந்து குசால் பெரோா விலகல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்  குசால் பெரேரா காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார். அண்மையில் இங்கிலாந்து தொடரில் இலங்கை படுதோல்வியை சந்தித்த நிலையில் பெரோா கேப்டன் பதவியில் இருந்து நீங்கப்பட்டு இந்திய தொடருக்கு தசுன் ஷானகா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக குசால் பெரேரா இந்திய தொடரில் இருந்துவிலகி உள்ளார்.  30 வயதான  இவர் இலங்கை அணிக்காக 107 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3071 ரன்னும், 50 டி.20 போட்டிகளில் 1347 ரன்னும் அடித்துள்ளார். இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெற உள்ளது….

The post இந்திய தொடரில் இருந்து குசால் பெரோா விலகல் appeared first on Dinakaran.

Related Stories: