பாடுவதை நிறுத்துகிறாரா ஸ்ரேயா கோஷல்?

இந்தியாவில் 20 மொழிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர், ஸ்ரேயா கோஷல். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், ’சில பாடகர்கள் மேடையில் பாடும்போது, லிப்-சிங்கிங் முறையில் பாடுகின்றனர். அவர்களுக்கு மேடையில் பாடுவது சரிப்பட்டு வருவது இல்லை போலும். அது அவர்களது பாணி. அது எனக்கு மிகவும் சிரமமானது. ஒருவேளை நான் அதுபோல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அன்றே நான் பாடுவதை நிறுத்திவிடுவேன். எனது குரல் வளம் எனக்கு துணையாக இருக்கும் வரை இசை பயிற்சியில் ஈடுபட்டு, மேடையில் நின்று பார்வையாளர்களுக்காக நேரடியாக பாடுவேன். மேடையில் பாடுவது சிரமமாக தோன்றலாம்.

அதற்கான பயிற்சிகள் இருந்தால் எளிமையானதுதான். இப்போது ஏஐ வளர்ச்சியை தவிர்க்க முடியாதது. ஆனால், திறமையான நபரை ஏஐயால் நீக்க முடியாது. எனவே, அவரவர் திறமையை வளர்த்துக்கொள்வது முக்கியம். ஏஐ என்பது மனிதன் அல்ல. அது மனிதனை போல் இருக்க முயற்சிக்கும். ஆனால், ஒருபோதும் மனிதனாக முடியாது. ஒரு விஷயத்துக்கு நீங்கள் எதிர்வினையாற்றுவது உங்களின் சுய முடிவு. ஏஐ நம்மை போல் உருவாக்க முயற்சிக்கும். அதனால் அசலான ஒன்றை உருவாக்க முடியாது’ என்றார்.

Related Stories: