மீண்டும் மலையாளத்தில் ஐஸ்வர்யா

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கடந்த 2017ல் மலையாளத்தில் வெளியான ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் சேர்ந்து நடித்தார். தமிழில் ‘துருவ நட்சத்திரம்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களுடன், நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் அவர், மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் படம், ‘புலிமட’. மம்முட்டி, நயன்தாரா நடித்த ‘புதிய நியமம்’ படத்தின் இயக்குனர் ஏ.கே.சாஜன் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ஜோஜூ ஜார்ஜ், லிஜோமோள் ஜோஸ் நடிக்கின்றனர். மலையாளத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், வசனங்களை தெலுங்கு மற்றும் தமிழில் எழுதி மனப்பாடம் செய்கிறார். பிறகு ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் புரிந்துமலையாளத்தில் பேசி நடிக்கிறார்.

Related Stories: