மதுரையில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மேலும் 3 குழந்தைகள் மீட்பு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மேலும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இரட்டை குழந்தை உள்ளிட்ட 3 பெண் குழந்தைகளை மீட்டு போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.
சித்ரா என்பவர் தனக்கு பிறந்த குழந்தைகளை உறவினர் சுகன்யா, செல்வி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். மற்றொரு பெண் குழந்தையை கலாவதி என்பவருக்கு கொடுத்துள்ளார். கலாவதிக்கு கொடுக்கப்பட்ட குழந்தை குறித்து பக்கத்து வீட்டுக்காரர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.
குழந்தையை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று போலீஸ் விசாரணையில் கலாவதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் குழந்தை பிறப்பு தொடர்பாக போலி பிறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையை சட்டவிரோதமாக விற்றது தொடர்பாக மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். சித்ராவுக்கு 6 குழந்தைகள் பிறந்ததில் 3 குழந்தைகள் இறந்த நிலையில் மீதமுள்ள 3 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது.
மதுரையில் 2 நாட்களுக்கு முன்பு 2 குழந்தைகளை மீட்டனர். இதைத் தொடர்ந்து தம்பதிகள் கண்ணன் – பவானி, சகுபர்சாதிக் – அனீஸ்ராணி, காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, புரோக்கர்கள் ராஜா, செல்வி ஆகிய 7 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். காப்பக நிர்வாகி சிவக்குமார், ஊழியர் மதர்சாவை தனிப்படையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை அவனியாபுரத்தில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மேலும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்….

The post மதுரையில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட மேலும் 3 குழந்தைகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: