ஐரோப்பிய நாடுகளை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ‘பசுமை பாஸ்போர்ட்’ என்ற அனுமதியை ஐரோப்பிய கூட்டமைப்பு நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது.  உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை போட்டுள்ள ஐரோப்பியர்களும், வெளிநாட்டினரும் அதற்கான மின்னணு சான்றிதழை பெற்று ஐரோப்பிய நாடுகளில், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயணம் செய்யலாம்.  இந்த பட்டியலில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போட்டுள்ள இந்தியர்களையும் சேர்க்கும்படி ஒன்றிய அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவில் பயணம் செய்தால் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் என எச்சரித்தது.இந்நிலையில், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஜெர்மனி, சுலவேனியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், எஸ்டோனியா ஆகிய  ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள்,  கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்களை பசுமை பாஸ்போர்ட் பட்டியலில் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளன. இதில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மற்றும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ள தடுப்பூசிகளை செலுத்திய அனைவருக்கும் அனுமதி அளிப்பதாக எஸ்டோனியா அறிவித்துள்ளது….

The post ஐரோப்பிய நாடுகளை மிரட்டி பணிய வைத்த ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: