மாநாடு வெற்றி விழா: சிம்பு புறக்கணிப்பு

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடந்தது.  இதில் வெங்கட் பிரபு, சுரேஷ் காமாட்சி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எதிராக சிம்பு தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.இது குறித்து விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது.எனக்குப் புரியவில்லை. இது ஒரு உண்மையான வெற்றி. ஆனால், இப்படத்தின் வெற்றி நாயகன் இந்த இடத்தில் இல்லாதது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னதான் ஷூட்டிங் இருந்தாலும் இங்கே வந்திருக்க வேண்டும்.

இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். கஷ்டமாக இருக்கிறது. அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும். என்றார்.

Related Stories: