புதிய ஓடிடி தளத்தை தொடங்கி வைத்தார் சீனு ராமசாமி

சென்னை: ஓடிடி பிளஸ் என்ற புதிய ஓடிடி துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ‘இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்’ என்றார். இயக்குனர் கேபிள் சங்கர் பேசும்போது, ‘இந்த ஓடிடி தளத்தை ஒரு நாளைக்கு ரூ.1க்கு தருகிறோம். புதிய திறமைகளை ஊக்குவிக்கவே இது கொண்டு வரப்படுகிறது’ என்றார்.

இயக்குநர்கள் ஜான் கிளாடி (பைரி), மணிவர்மன் (ஒரு நொடி), ரா.வெங்கட் (கிடா), பாலாஜி வேணுகோபால் (லக்கி மேன்), கண்ணுசாமி ராஜேந்திரன் (வட்டார வழக்கு), யஷ்வந்த் கிஷோர் (கண்ணகி), விக்னேஷ் கார்த்திக் (ஹாட்ஸ்பாட்), சரத் ஜோதி மற்றும் எழுத்தாளர்கள் வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஸ்மி (கூஸ் முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ்) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

The post புதிய ஓடிடி தளத்தை தொடங்கி வைத்தார் சீனு ராமசாமி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: