சென்னை துறைமுகத்தை மேம்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் திமுக எம்.பி கேள்வி

புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஒன்றிய அரசுக்கு நேற்று எழுப்பிய கேள்வியில், ‘‘சென்னை துறைமுகத்தை நாட்டின் மேம்பட்ட மற்றும் அதிக அளவு கையாளும் துறைமுகங்களில் ஒன்றாக மேம்படுத்த ஒன்றிய அமைச்சகம் பரிசீலித்து வருகிறதா, அப்படியானால், திட்டங்களின் விவரங்கள் மற்றும் அதன் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, இதையடுத்து சென்னை துறைமுகம் எப்போது மேம்படுத்தப்படும். இல்லயென்றால் கால தாமதற்திற்கான காரணம் என்ன கேட்டிருந்தார். இதையடுத்து ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால், பதிலில், ‘‘சென்னை துறைமுகத்தில் நவீனமயமாக்கல் மற்றும் பெர்த்களை மறுவடிவமைப்பு செய்தல், சரக்கு கையாளும் இயந்திரமயமாக்கல், துறைமுக இணைப்பை மேம்படுத்துதல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதேப்போன்று செயல்திறன் மற்றும் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்துவது, கப்பல்துறைகள் மற்றும் கிடங்குகளை தொடர்ந்து புதுப்பித்தல் ஆகியவையும் சாகர்மாலா திட்டத்தின் கீழ் பலவை பிரதமரின் கதி சக்தி முன்முயற்சி மற்றும் பிபிபி திட்டங்கள் சென்னை துறைமுகத்தில் முடிக்கப்பட்டுள்ளன மேலும் சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இதேப்போன்று கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் இதுவரை வசூலிக்கப்பட்ட வரி வருவாய் மற்றும் வருவாய் செலவினங்களுக்கு உள்ள ஏற்றத்தாழ்வு குறித்தும் மாநிலங்களைவையில் எம்பி ராஜேஷ்குமார் கேட்டிருந்தார். டோல்கேட் அகற்ற வேண்டும்: சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில், ‘‘சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள இருவழிச் சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றுவதற்கு சமீபத்தில் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஆத்தூர் நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைவதால் ஏற்படும் தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க, செல்லியம்பாளையம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும். அதேப்போன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள டோல்கேட்டை அகற்ற வேண்டும்’’ என்றும் தெரிவித்துள்ளார்….

The post சென்னை துறைமுகத்தை மேம்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் திமுக எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: