அபிஷன், அனஸ்வரா நடிக்கும் வித் லவ்

சென்னை: ஜியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு ‘வித் லவ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் டீசரை , ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related Stories: