தங்கைக்கு வாழ்த்து சொன்ன அக்கா

சாய்பல்லவியின் தங்கை பூஜா நடித்துள்ள சித்தரைச் செவ்வானம் படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இதையொட்டி தங்கையை வாழ்த்தி சாய்பல்லவி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு: ரசிகர்கள் அனைவரும் 'சித்திரை செவ்வானம்' படத்தைப் பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு வழங்க வேண்டும்.

மேலும், ஒரு கேரக்டரில் நடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட பார்வையாளர்கள் பொழியும் அன்பு அதிக போதையைக் கொடுக்கும். அதைப் பெறுவதற்கு ஒவ்வொரு சூழலிலும் உன்னை ஒரு சிறந்த நபராக வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை எப்போதும் பாதுகாப்பேன் . இவ்வாறு சாய்பல்லவி எழுதியுள்ளார்.

Related Stories:

More