பிரபுதேவா படத்தில் வரலட்சுமி..!

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரண்டாம் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார், இதில் இரண்டாம் குத்து படத்தில் ஹீரோவாக நடித்தார். வழக்கமாக தனது படங்களின் கதைக்காகவும், காட்சிகளுக்காகவும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவர், தற்போது பிரபுதேவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். வரலட்சுமி, ரைசா வில்சன் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

பல்லூ ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். மினி ஸ்டுடியோ சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா நடித்துள்ள எங் மங் சங், தேள், ஊமை விழிகள், மை டியர் பூதம், பொன் மாணிக்கவேல், பஹீரா ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. சில படங்களின் ஷூட்டிங், பைனான்ஸ் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>