அண்ணனை பாராட்டும் தனுஷ்

தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய படம் காதல் கொண்டேன். இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். இதை பற்றி தனுஷ் கூறும்போது, ‘காதல் கொண்டேன், படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்துவிட்டதை நம்ப முடியவில்லை. இப்போதுதான் படத்தில் நடித்தது போல் அனுபவம் இருக்கிறது. இந்த படத்துக்காக என்றென்றும் எனது அண்ணன் செல்வராகவனுக்கு கடமைப்பட்டுள்ளேன். அவரால்தான் இந்த படம் சாத்தியமானது. 

அவரால்தான் இந்த படத்தால் எனக்கு ஒரு இடமும் சினிமாவில் கிடைத்தது’ என கூறியுள்ளார். இதேபோல் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவரும் செல்வராகவனின் மாஜி மனைவியுமான சோனியா அகர்வாலும் இந்த படத்தில் தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக செல்வராகவனுக்கு நன்றி கூறியுள்ளார்.

Related Stories: