காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்; எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை வகித்தார். பொது செயலாளர் மணவை சாதிக் அலி வரவேற்றார். கூட்டத்தில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் டிசம்பர் 6ம்தேதி அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தேசம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 6  அன்று நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் நடத்துவது.கட்சியின் மாவட்ட பொதுக்குழுவை நடத்துவது. கட்சியின் ஓராண்டு செயல்பாடு மற்றும் வளர்ச்சியை  மீளாய்வு செய்வது. மீனவர் தினத்தை கொண்டாடிய மீனவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு குமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான கானாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிக்காப்டர் தளம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சாலிம், செயலாளர் ஜாபர் அலி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள்,  தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர்ஹுசைன் நன்றி கூறினார்….

The post காணாமல் போகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும்; எஸ்டிபிஐ செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: