ஓ மை கடவுளே படத்தில் கவுதம் மேனன்

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா நடித்துள்ள படம், ஓ மை கடவுளே. கடவுள் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். தற்போது  இயக்குனர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவு, விது அயன்னா. இசை, லியான் ஜேம்ஸ். இயக்கம், அஷ்வத் மாரிமுத்து.

படம் குறித்து தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு கூறுகையில், ‘இப்படத்தில் சில காட்சி தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போல் அமைந்துள்ளது. அந்த காட்சிகளில் நிஜ  இயக்குனர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று  நினைத்தோம். பிரபலமாக இருக்க வேண்டும். மேலும், காதல் கதைகளை இயக்கியவராக இருக்க வேண்டும் என்று யோசித்தபோது கவுதம் மேனன் நினைவுக்கு வந்தார். யு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகிறது’ என்றார்.

Related Stories: