‘தெரியாம செஞ்சிட்டேன்’ நடிகர் அலறல்

எல்லாவற்றுக்கும் ஆதரித்தும், எதிர்த்தும் குரல் கொடுக்கும் நடிகர், நடிகைகள் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி கப்சிப் என்றிருக்கிறார்கள். சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை கிண்டல் செய்து ஒரு நபர் ட்விட்டர் மெசேஜ் வெளியிட்டார். அதை 2.0 பட வில்லனும், இந்தி நடிகருமான அக்‌ஷய்குமார் லைக் செய்துள்ளார். அது அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது டிவிட்டர் மெசேஜை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நெட்டில் கடுமையாக தாக்கி மெசேஜ் வெளியிட்டனர்.

கனடாகுமாரை (கனடா நாட்டு உரிமை பெற்றவர் அக்‌ஷய்) புறக்கணியுங்கள் என்று ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கினர். அதற்கு விளக்கம் அளித்துள்ள அக்‌ஷய்,’தெரியாமல் அந்த டிவிட்டை லைக் செய்துவிட்டேன். அது தெரியவந்ததும் உடனே அன்லைக் செய்துவிட்டேன். இப்படிப்பட்ட விஷயங்களை நான் ஆதரிப்பதில்லை’ என ஸாரி கேட்காத குறையாக அலறி இருக்கிறார். ஆனாலும் நெட்டிஸன்கள் அக்‌ஷய் குமாரை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறன்றனர்.

Related Stories: