ஷூட்டிங்கில் குட்டி ராதிகாவுக்கு கண்கள் பாதிப்பு

தமிழில் இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் ஆகிய படங்களில் நடித்தவர், கன்னட நடிகை குட்டி ராதிகா. நீண்ட இடைவெளிக்கு பிறகு  தமிழில் அவர் நடித்துள்ள படம், தமயந்தி. இதில் லோகி, சாது கோகிலா, ராஜ்பால வாடி, ரஜினிகாந்த்  நண்பர் ராஜ்பகதுார் நடித்துள்ளனர். தயாரித்து இயக்கியுள்ள நவரசன் கூறியதாவது: 1980ல் ஹீரோயின் மற்றும் அவரது குடும்பத்தினரை வில்லன்கள் அழித்துவிடுகிறார்கள்.

2019ல் அரண்மனையில் இருந்து வெளியே வரும் ஹீரோயின் ஆவி, தன்னுடன் சேர்த்து குடும்பத்தினரை அழித்தவர்களை தேடுகிறது. அப்போது நடக்கும் திகிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. ஒரு காட்சியில் கண் சிமிட்டாமல், கான்டாக்ட் லென்ஸ்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்று  குட்டி ராதிகாவிடம் சொன்னேன்.

இதை அவர் மிகப் பெரிய சவாலாக எடுத்துக்கொண்டு 3 நிமிடம்,  16 விநாடிகள் கண் சிமிட்டாமல் ஒரே டேக்கில் நடித்தார். அப்போது ஷூட்டிங் லைட்டுகளால் ஏற்பட்ட வெப்பத்தில், அவர் அணிந்திருந்த கான்டாக்ட் லென்ஸ்கள் உருகிவிட்டது. உடனே  டாக்டரை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளித்தோம்.

Related Stories: