கல்லங்குறிச்சி வரதராஜபெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா துவக்கம்

அரியலூர்: அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலில் ராமநவமியை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான  தேரோட்டம்  21ம்தேதியும், ஏகாந்தசேவை 22ம்தேதி இரவும் நடைபெறுகிறது. அரியலூர் அருகே உளள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜபெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.  இக்கோயிலின் ஆண்டு திருவிழா ராமநவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன் படி இந்த ஆண்டு திருவிழா ராமநவமியான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு கலியபெருமாளுக்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனைதொடர்ந்து கொடிமரத்திற்கு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கருடக்கொடி ஏற்றப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்  கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். வரும் 19ம்தேதி திருக்கல்யாணமும், 21ம்தேதி  தேரோட்டமும், 22ம்தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான ஏகாந்தசேவையும் நடைபெறுகிறது.

Related Stories: