அக்டோபர் 11ம் தேதி ஓடிடியில் 7 மொழியில் வாழை

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 23ம் தேதி வெளியான படம் ‘வாழை’. இப்படத்தை இயக்கியதை தாண்டி மாரி செல்வராஜே தயாரிக்கவும் செய்திருந்தார். இப்படத்தில் பொன்வேல், ராகுல் ஆகிய சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவர்களுடன் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கவுள்ளதாக மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.

The post அக்டோபர் 11ம் தேதி ஓடிடியில் 7 மொழியில் வாழை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: