சென்னை: ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி எழுதி தயாரித்து இசை அமைத்து இயக்கி நடித்திருந்த ‘கடைசி உலகப் போர்’ என்ற படம், கடந்த 20ம் தேதி தமிழகத்தில் திரைக்கு வந்தது. இதில் நாசர், நட்டி, அனகா, அழகம்பெருமாள், ஹரீஷ் உத்தமன், முனீஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், ‘மகாநதி’ சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷாரா, குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் நடித்திருந்தனர். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இப்படம், விரைவில் வட இந்தியாவில் இந்தியில் வெளியாகிறது. முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் மட்டுமே இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது ‘கடைசி உலகப் போர்’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக ஹிப்ஹாப் ஆதி மாறியுள்ளார். வரும் அக்டோபர் 4ம் தேதி இப்படம் இந்தியில் திரைக்கு வருகிறது.
The post இந்தியில் வெளியாகிறது கடைசி உலகப் போர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.