கழுத்தில் ஸ்டெம் செல் பேட்ச் அணிந்த ரகுல் பிரீத் சிங்

மும்பை: முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், மும்பை விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த பேட்ச் பலரது கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான போட்ேடாக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள், அது என்ன பேட்ச் என்று ஆவலுடன் கேட்டு வருகின்றனர்.

தனது கழுத்தில் ரகுல் பிரீத் சிங் அணிந்திருப்பது, ஸ்டெம் செல் பேட்ச். இதை அவர் எதற்காக ஒட்டியிருக்
கிறார் என்று தெரியவில்லை. உடலிலுள்ள செல்களை புதுப்பிக்கவும் மற்றும் மூட்டு வலி, தசை வலியை குறைக்கவும் இது பயன்படுத்தப்படலாம். தோல் மற்றும் மென்மையான திசுக்களை குணப்படுத்துவதில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது. இதில் ஏதாவது ஒரு காரணத்துக்காக ரகுல் பிரீத் சிங் ஸ்டெம் செல் பேட்ச்சை ஒட்டியிருக்கலாம் என்று சிலர் கூறியிருக்கின்றனர்.

Related Stories: