ஜெயம் ரவி - நிதி அகர்வால் நடிக்கும் பூமி

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண், தற்போது ஜெயம் ரவியின் 25வது படத்தை இயக்குகிறார். அதற்கு பூமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு, டட்லி. இசை, டி.இமான். பாடல்கள்: தாமரை, மதன் கார்க்கி. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Related Stories: