தூக்கம் இல்லாததால் உடல்நிலை பாதிக்கிறது: ராஷ்மிகா கவலை

 

மும்பை: கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தியில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த வருடம் எனக்கு மிகச்சிறந்த வருடமாக இருக்கிறது. நான் நடித்த 5 படங்கள் ரிலீசாகியுள்ளன. சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன.

எனினும், எல்லா படங்களும் எனக்கு முக்கியமான படங்கள் என்றுதான் சொல்வேன். எனது திரையுலக பயணத்தின் தொடக்கத்தில், இதுபோன்ற படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை. அதன் பிரதி பலிப்புதான், இப்போது ஒரே வருடத்தில் எனக்கு 5 படங்கள் ரிலீசாகியுள்ளன. பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதை மட்டுமே வெற்றியாக உணரவில்லை.

‘தி கேர்ள் ஃப்ரண்ட்’ போன்ற படங்களில் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடிப்பதையே மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன். தினமும் நான் இடைவிடாமல் வேலை செய்வதால், நிம்மதியாக தூங்க நேரம் கிடைப்பதில்லை. ஒருநாளில் 4 அல்லது 5 மணி நேரம்தான் தூங்க முடிகிறது. அதனால்தான் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் அதிக வேலையின் காரணமாக நடக்கிறது. இதை சரிப்படுத்த முயற்சித்து வருகிறேன்’ என்றார்.

Related Stories: