தளபதி 64 படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 64வது படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். இதில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். அவரது வேடம் வில்லத்தனம் நிறைந்தது என்று கோலிவுட்டில் தகவல் பரவியுள்ளது.