5 மருந்துகளில் செயல் திறன்பாடி இல்லை என கண்டுபிடிப்பு: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ராம்தேவ் நிறுவனங்கள்

லக்னோ: யோகா மாஸ்டர் ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் 5 மருந்து பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசி மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரிகைகள் என 5 மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த மருந்துகளை சாப்பிட்ட பலர் உடல் உபாதை ஏற்படுவதாக கூறி புகார் அளித்ததின் பேரில் உத்தரகாண்ட் மாநிலம் ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பட்டு இயக்குனரகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. குறிப்பிட்ட 5 பொருட்களை ஆய்வு செய்ததில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக ரத்தக்கொழுப்பு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும் செயல்திறன் அந்த மருந்துகளுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்துகள் மூலம் குறிப்பிட்ட வியாதிகளில் இருந்து மீண்டு வரலாம் என்பதை சுட்டிக்காட்டி திவ்யா பார்மசிக்கு மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடிதம் எழுதியுள்ளது. குறிப்பிட்ட 5 மருந்து பொருட்கள் மீது தடை விதிக்கப்படுவதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் நகல் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில் ராம்தேவ் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை ஒன்றிய ஆயுஷ் அமைச்சகத்துக்கு ராம்தேவ் மீதான புகார்களை பட்டியலிட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதற்கு ஆயுஷ் அமைச்சகம் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. …

The post 5 மருந்துகளில் செயல் திறன்பாடி இல்லை என கண்டுபிடிப்பு: அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ராம்தேவ் நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: