திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்தார் ரியா

தாஜ்மகால் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ரியா சென். பெங்காலி நடிகையான இவர், இந்தியில் பல படங்களில்  நடித்தார். ஒரு கட்டத்தில் அங்கும் பட வாய்ப்புகள் டல்லடித்ததால் கடந்த  2017ம் ஆண்டு சிவம் திவாரி என்பவரை மணந்துகொண்டு செட்டிலானார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா?

திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர முடிவு செய்தார். எவ்வளவு முயன்றும் சென்ற வருடம் ஒரு படமும் ஒப்பேறாத நிலையில் இந்த ஆண்டு இந்தி, வங்காள மொழியில் உருவாகும், ‘மிஸ்மேட்ச் 2’வில் நடித்து வருகிறார்.

வயதோ 38. இன்னும் வாலிப்பான உடலை மெயின்டெய்ன் செய்துகொண்டிருக்கிறார் ரியா. வயது ஏற ஏற நான் மெருகேறிக்கொண்டேதான் இருக்கிறேன். என் அழகுக்கு  வயதே கிடையாது என்றபடி நீச்சல் குளத்தில் பூத்த ரோஜாபோல் பளிச்சிடும் கவர்ச்சி புகைப்படத்தை  வெளியிட்டு இளவட்டங்களை சுண்டி இழுத்திருக்கிறார் ரியா.

Related Stories: