எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மான்ஸ்டர் படம் சமீபத்தில் வெளியானது. இதில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது: மான்ஸ்டர் என் கேரியரில் முக்கியமான படம். நான் நடித்த படத்திற்கு மக்கள் குடும்பமாக வருவதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்படியான ஒரு படத்தை நான் கொடுக்காமல் விட்டுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. இனி மான்ஸ்டர் போன்று நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பேன்.