8 தோட்டாக்கள் படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. மலையாள படங்களில் நடித்திருக்கும் இவர், ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளம் மயம் படத்திலும் நடித்தார். இப்போது சூர்யா ஜோடியாக நடிக்கிறார். இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.