துபாய் ரேடியோ ஜாக்கி வில்லத்தனம்

திரையுலகிற்கு பல்வேறு துறைகளிலிருந்து டெக்னிஷியன், நடிகர்களாக என்ட்ரி ஆகிவருகின்றனர். சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் கார்த்தி, திரைப்படத் துறைக்கு என்ஜினியரிங் படித்த இளைஞர்களும் வருகிறார்கள். அந்தளவுக்கு திரையுலகம் பலரை கவர்ந்திருக்கிறது என்றார்.

துபாயில் ரேடியோ ஜாக்கியாக இருந்த வினோத் சாகர் கோலிவுட்டில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கூறும்போது,’துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்துவிட்டு சென்னைக்கு வந்து டப்பிங் கலைஞன் ஆனேன். அதன் மூலம் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.  இதயம் திரையரங்கம் படத்தில் அறிமுகமாகி ஹரிதாஸ், ஆரஞ்சுமிட்டாய், உறுமின் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறேன். ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் இன்பராஜ் என்ற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்திருந்தேன். அந்த வேடத்தைபார்த்து பலரும் கோபப்பட்டார்கள், பாராட்டவும் செய்தார்கள். அந்த கேரக்டர் ரசிகர்களை பாதித்தது. இது எனக்கு கிடைத்த அங்கீகாரம். தற்போது தமிழ் தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறேன்’ என்றார்.

Related Stories: