வேளாண் அறிவியல் நிலையத்தில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்-விஞ்ஞானிகள் ஆய்வு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணையில் பயிர் மாதிரி திடல் குறித்து நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் கூறுகையில்-அறிவியல் நிலைய பண்ணையில் உள்ள பயிர் மாதிரி திடலில் பலதரப்பட்ட பயிர் மாதிரிகள் வளர்த்து இருக்கிறோம். அந்த வகையில் தானியப் பயிர்கள், சிறுதானியங்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள், பணப் பயிர்கள், முருங்கை என அனைத்து பயிர்களும் மிக நன்றாக வளர்ந்துள்ளது என்றார்.அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பயிர் மாதிரி திடலில் வரப்பு பயிர்கள் மற்றும் கவர்ச்சி பயிர்கள் என அனைத்துமே விவசாயிகளுக்கு காண்பிப்பதற்காக வளர்த்துள்ளதாக கூறினார். மேலும் தற்போது இந்த பயிர் மாதிரி திடலில் சூரியகாந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது எனவும், அனைத்து வகையான சிறுதானியங்கள் மிக நன்றாக வளர்ந்துள்ளது. இந்த பயிர் மாதிரி திடலில் விளக்குப்பொறி, இனக் கவர்ச்சிப் பொறி, பறவை குடில்கள், முட்டை ஒட்டுண்ணிகள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது.எனவே விவசாயிகள் இந்த பயிர் மாதிரி திடலை பார்வையிட்டு எதிர்வரும் பருவத்திற்கு பயிர்களை தேர்வு செய்ய எளிதாக இருக்கும் என்றார்….

The post வேளாண் அறிவியல் நிலையத்தில் பூத்து குலுங்கும் சூரியகாந்தி பூக்கள்-விஞ்ஞானிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: