ஜோரா கைய தட்டுங்க விமர் சனம்

மேஜிக் நிபுணரான யோகி பாபுவுக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் சிலருடன் பகை ஏற்படுகிறது. ஒரு ரவுடியை வைத்து யோகி பாபுவின் கையை வெட்டுகின்றனர். இதனால் யோகி பாபுவால் மேஜிக் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலையில், தொடர்ச்சியாக சில படுகொலைகள் நடக்கிறது. கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. இதன் முடிவை தெரிந்துகொள்ள 2ம் பாகத்துக்கு லீட் கொடுத்துள்ளனர். ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ வினீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லரை அதற்கான மீட்டரில் கொடுக்க தடுமாறியுள்ளார். இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்றவனை பழிவாங்கும் பாணியை மாற்றி யோசித்துள்ளார்.

கதையின் நாயகன் யோகி பாபு சில காட்சிகளில் அழுத்தமாகவும், பல காட்சிகளில் மேலோட்டமாகவும் நடித்துள்ளார். அவரை ஒருதலையாய் காதலிக்கும் சாந்தி ராவ், வசனங்களை ஒப்பிக்கும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் ெபராடி, ‘விக்ரம்’ வசந்தி, கல்கி, ‘அருவி’ பாலா, மணிமாறன், ஜாகிர் அலி, ஆகியோர், இயக்குனர் சொன்னதை செய்துள்ளனர். கிரைம் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லருக்கு ஏற்ற ஒளிப்பதிவை மது அம்பாட் சிறப்பாக செய்துள்ளார். ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும், எஸ்.என்.அருணகிரியின் இசையும் கவனத்தை ஈர்த்துள்ளன. கதை, திரைக்கதை, வசனத்தை கே.பிரகாஷுடன் இணைந்து எழுதி வினீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். யோகி பாபுவின் படங்களை ரசிப்பவர்களை இப்படம் ஏமாற்றவில்லை.

Related Stories: