இளையராஜா இசையில் அறிவு, வேடன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ரா.முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணியம் சிவா, ரஷ்ய மாயன் நடித்துள்ள படம், ‘அரிசி’. ஜான்ஸ் வி.ஜெரின் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். கே.எஸ்.நதிஸ் எடிட்டிங் செய்துள்ளார். மோனிகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.சண்முகம், எஸ்.எம்.பிரபாகரன், மகேந்திர பிரசாத் தயாரித்துள்ளனர். இப்படத்துக்காக அறிவு, மலையாள ‘ராப்’ பாடகர் வேடன் இணைந்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஏ.விஜயகுமார் கூறுகையில், ‘இளையராஜா இசையில் விவசாயம் பற்றிய பாடலை அறிவு எழுதி, வேடனுடன் இணைந்து பாடியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில் பாடல் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இம்மாத இறுதியில் இசை வெளியீட்டு விழா நடக்கிறது’ என்றார். முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்: காளமாடன்’ என்ற படத்தில் அறிவு, வேடன் இணைந்து ‘ரெக்க ரெக்க’ என்ற பாடலை பாடியிருந்தனர். தற்போது கேரளாவின் முன்னணி ‘ராப்’ பாடகராக இருக்கும் வேடனுக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Related Stories: