ஓரின சேர்க்கையாளர்களுடன் ரிமா கல்லிங்கல் விருந்து

யுவன் யுவதி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ரிமா கல்லிங்கல். மலையாள திரைத்துறை பெண்கள் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார். அவ்வப்போது சமூக சேவைகளில் ஈடுபடுவதுடன், சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்தும் கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அதற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகள் இணைய தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

நடிகை ரிமா கல்லிங்கல் ஒருபடி மேலே சென்று நேரடியாகவே ஓரின சேர்க்கையாளர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஓரின சேர்க்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள். அந்த இடத்துக்கு ஏற்கனவே பலமுறை சென்று அவர்களுடன் பேசி பழகி வந்திருக்கிறார் ரிமா.

ஓரின சேர்க்கையாளர்கள் தொடர்பான வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற ரிமா, அங்கிருந்த ஓரின சேர்க்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டார். சுமார் 2 மணி நேரம் அவர்களுடன் மனம் திறந்து பேசிய ரிமா பின்னர் விடைபெற்று புறப்பட்டு சென்றார்.

Related Stories: