அஜித்துடன் நடிக்க மறுத்த பிரேமலு ஹீரோ

சென்னை: சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித், திரிஷா தம்பதியின் மகனாக நடித்திருந்தார் கார்த்திகேயா தேவ். இவர் ஏற்கனவே பிரபாஸின் ‘சலார்’ திரைப்படத்தில் சிறு வயது பிருத்விராஜாக நடித்தவர். பிறகு ‘எம்புரான்’ படத்திலும் ஜூனியர் பிருத்விராஜ் ஆக நடித்திருந்தார். ‘குட் பேட் அக்லி’யில் மகன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘பிரேமலு’ படத்தில் கதாநாயகனாக நடித்த நஸ்லேன் தான்.

ஆனால் அவர் நடிக்கவில்லை. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் நஸ்லேன் கூறும்போது, ‘‘குட் பேட் அக்லியில் அஜித்தின் மகனாக நடிக்கும்படி ஆதிக் ரவிச்சந்திரன் என்னை அணுகினார். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு அது. ஆனாலும் அது பெரிய படம். இரண்டு ஷெட்யூலாக அதிக நாட்கள் எடுக்கப்பட இருந்தது. அந்த சமயத்தில் தான் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தேன். அதனால் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு தேதிகள் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டது’’ என்றார்.

Related Stories: