ராணி எலிசபெத் மரணம்: இங்கி-தெ.ஆப்ரிக்கா டெஸ்ட் ஒத்திவைப்பு

லண்டன்: இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96வது வயதில் நேற்றிரவு உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்து-தென்ஆப்ரிக்கா இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆனால் மழையால் முதல்நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இன்று 2வதுநாள் ஆட்டம் நடைபெற இருந்த நிலையில் ராணி மறைவால் இன்றைய நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆட்டம் மீண்டும் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் தென்ஆப்ரிக்காவும், 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனில் இருப்பது குறிப்பிடத்தக்கது….

The post ராணி எலிசபெத் மரணம்: இங்கி-தெ.ஆப்ரிக்கா டெஸ்ட் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: