பாட்டுக்கு ஏற்ற மாதிரி நடன இயக்குனர்கள் ஸ்டெப்ஸ் அமைக்க வேண்டும். ‘கேம் சேஞ்சர்’ படத்தில் எந்த பாட்டிற்கும் நல்ல ஹூக் ஸ்டெப் கூட கிடையாது. ‘ஆல வைகுந்தபுரமுலோ’ படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டிற்கும் ஒரு ஹுக் ஸ்டெப் இருந்தது. ஆனால் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் அப்படி எதுவும் இல்லை. இந்தியில் ‘பேபி ஜான்’ பாட்டிற்கும் ஒரு ஹூக் ஸ்டெப் இருந்தது. அந்த பாட்டு எப்படி வரவேண்டும் என்று இயக்குனருக்கு ஒரு தெளிவு இருந்தது. படத்தின் நடிகர், டான்ஸ் மாஸ்டர் என எல்லாரும் தான் இதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டும் மக்களுக்கு பிடித்தது. ஆனால் அந்த பாடல்களுக்கு ரீல்ஸ் போடும்படி எந்த ஹூக் ஸ்பெப்பும் இல்லாததால் அது பெரியளவில் ரீச் ஆகவில்லை. இவ்வாறு தமன் கூறியுள்ளார்.
