சென்னை: தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மொழி மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா, தற்போது பிரபாசுடன் ‘ராஜா சாப்’, கார்த்தியுடன் ‘சர்தார்’ படங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர், நீங்கள் வெர்ஜினா? என கேள்வி கேட்டிருந்தார். இதனால் கோபமடைந்த மாளவிகா மோகனன், ‘இதுபோன்ற கேவலமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘இப்போதைக்கு எனக்கு கணவர் வேண்டாம்’ என தடாலடியாக மாளவிகா பதிலளித்தார்.