நொய்டா: உத்தரப் பிதேசத்தின் நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடத்தை வரும் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளது. கட்டிடம் முழுவதும் 3,700 கிலோ வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 2 கட்டிடத்திலும் மொத்தமாக 20 ஆயிரம் வெடிப்பொருள் இணைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு, கட்டிடம் தகர்க்கப்பட உள்ளது. இந்நிலையில், கட்டிடங்கள் இடிக்கப்படும் 28ம் தேதி இந்த பகுதியில் அனுமதியின்றி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இரட்டை கட்டிடத்தின் முன்புறம் 450 மீட்டர், மற்ற பக்கங்களில் 250 மீட்டர் பகுதிக்குள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், டிரோன்களை பயன்படுத்துவதாக இருந்தால், முன்கூட்டியே உள்ளூர் போலீசில் அனுமதி பெறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது….
The post நொய்டாவில் டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.