சிலம்ப ஆசான்களுக்கு விருது வழங்கவேண்டும்; சிலம்ப ஒருங்கிணைப்பு சங்கம் தீர்மானம்

சென்னை: உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப  ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின்  பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் என்.ஆர்.தனபாலன் தலைமையில் நடந்தது.  இணை செயலாளர் சிலம்ப ஆசான் எம்.ராஜா, சிலம்ப ஆராய்ச்சி குழு துணை தலைவர்கள்   ஜே.கிருஷ்ணசாமி, எஸ்.ஜே.அருண் கேசவன், கே.பி.நாராயணன், ஆர்.கே.முரளி மற்றும் கோபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மூத்த சிலம்ப ஆசான்களுக்கு  தமிழக அரசு விருதுகள்  வழங்கி உதவித்தொகை வழங்கவேண்டும்.  ஒன்றிய அரசு சிலம்பத்தை  கோலோ இந்தியாவில்  சேர்த்திருக்கிறது. தமிழ்நாடு அரசு சிலம்பத்தில்  பதக்கம்  வென்ற வீரர்களுக்கு  அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு தரப்படும் என்றும், கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் சொல்லி இருக்கிறார். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் சிலம்பம் சேர்க்கப்படும் என்றும்  சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.  அரசாங்க பள்ளிகளில் தகுதிவாய்ந்த சிலம்ப  ஆசிரியர்களை பணியில் அமர்த்தவேண்டும். அரசு பள்ளிகளில் நடைபெறும் சிலம்ப விளையாட்டு போட்டிகள் வெளிப்படை தன்மையோடு  நடத்தப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. …

The post சிலம்ப ஆசான்களுக்கு விருது வழங்கவேண்டும்; சிலம்ப ஒருங்கிணைப்பு சங்கம் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: