அகரம் அலுவலகம் என் வருமானத்தில்தான் கட்டினேன்: சூர்யா விளக்கம்

சென்னை: சென்னையில் உள்ள தி.நகரில் ‘அகரம்’ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டார். செய்தியாளர்களிடம் சூர்யா பேசும்போது, “ஒரு சின்ன விதை தான் ஆலமரமாக இந்த இடத்துக்கு வந்துள்ளது. இந்த ‘அகரம்’. அப்போது 10-க்கு 10 அறையில் தொடங்கினோம். பின்பு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளது. இப்போது 700 மாணவ, மாணவியர்களை படிக்க வைக்கிறோம்.

இதற்கு 10,000 விண்ணப்பங்கள் வருகின்றன. படிப்புக்காக கொடுக்கப்பட்ட நன்கொடையில் இந்த இடம் உருவாக்கப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். எனது வருமானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டிடம்தான் இது. நன்கொடைகள் அனைத்தையும் படிப்பு சார்ந்து மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய பேருடைய அன்பும், ஆதரவும் தேவைப்படுகிறது. பணம் மட்டுமன்றி நேரமும் தேவைப்படுகிறது’’ என்றார்.

Related Stories: