ஓ காட் பியூட்டிஃபுல் டைட்டில் டீசர் ரிலீஸ்

சென்னை: பரிதாபங்கள் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து இருக்கும் படம், ‘ஓ காட் பியூட்டிஃபுல்’. விஷ்ணு விஜயன் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் கோபி, சுதாகர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் விடிவி கணேஷ், வின்சு சாம், ரமேஷ்கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கவுதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் நடித்துள்ளனர்.

சக்திவேல், கே.பி.கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜே.சி.ஜோ இசை அமைத்துள்ளார். அருண் கவுதம் பின்னணி இசை அமைத்து, பாடல்களுக்கும் சேர்ந்து இசை அமைத்துள்ளார். நடுத்தரக் குடும்ப சம்பவங்களை சொல்லும் கதையில், அனைவரும் தங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் விதமாக காட்சிகளை அமைத்து, ஃபேண்டஸி கலந்த காமெடி படமாக உருவாக்கப் படுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணி நடந்து வருகிறது.

Related Stories: