ஜம்மு: காஷ்மீர் நடிகையை கொன்ற வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகளில் 3 பேரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி முனையில் பிடித்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புத்காமில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. புட்காமின் வாட்டர்ஹில் பகுதியில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதிகள் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கடந்த மே மாதம் சந்துரா தாலுகா அலுவலக ஊழியர் ராகுல் பட் மற்றும் காஷ்மீரி நடிகை அம்ரீன் பட் ஆகியோரை கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, புட்காமில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஒருவனை ராணுவம் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூன்று பேர் துப்பாக்கி முனையில் சுற்றிவளைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து காஷ்மீர் ஏடிஜிபி விஜய் குமார் கூறுகையில், ‘புல்வாமா அடுத்த சர்குலர் சாலையில் சுமார் 25 முதல் 30 கிலோ எடையுள்ள கண்ணிவெடிகள் உள்ளிட்ட வெடிப் பொருட்கள் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது’ என்றார்….
The post காஷ்மீர் நடிகையை கொன்ற 3 தீவிரவாதிகள் சிக்கினர் appeared first on Dinakaran.