காமன்வெல்த் மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பவினா ஹஸ்முக்பாய் படேல் தங்கப் பதக்கமும், சோனல்பென் மனுபாய் படேல் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். ஒற்றையர் இறுதிப் போட்டியில் நைஜீரியாவின் கிறிஸ்டியானா இக்பெயோயி உடன் மோதிய பவினா 12-10, 11-2, 11-9 என்ற நேர் செட்களில் வென்று முதலிடம் பிடித்தார். கிறிஸ்டியானா வெள்ளிப் பதக்கம் பெற்றார். 3வது இடத்துக்கான மோதலில் இங்கிலாந்தின் சூ பெய்லியை எதிர்கொண்ட சோனல்பென் 11-5, 11-2, 11-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார்….
The post பாரா டிடியில் 2 பதக்கம் appeared first on Dinakaran.