* அனந்தபூரில் நரடந்த துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா சி அணியை 132 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மயாங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது (3 போட்டியில் 2 வெற்றி, 1 தோல்வி). ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான இந்தியா சி அணி 9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தது (1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி). இந்தியா பி 3வது இடமும் (7 புள்ளி), இந்தியா டி (6) 4வது இடமும் பிடித்தன.
* இலங்கை அணியுடன் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் டெஸ்டில், 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து, 4ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்துள்ளது. ரச்சின் 91 ரன், அஜாஸ் (0) களத்தில் உள்ளனர். கை வசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க நியூசிலாந்து அணிக்கு இன்னும் 68 ரன் தேவைப்படுவதால், இன்றைய கடைசி நாள் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
* இங்கிலாந்து அணியுடன் லீட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 68 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியா 44.4 ஓவரில் 270 ரன் ஆல் அவுட் (மிட்செல் மார்ஷ் 60, அலெக்ஸ் கேரி 74); இங்கிலாந்து 40.2 ஓவரில் 202 ரன் ஆல் அவுட். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸி. 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி செஸ்டர் லி ஸ்டிரீட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது.
The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.