சி ல் லி பா யி ன் ட்…

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர்கள் ரபேல் நடால், கார்லோஸ் அல்கராஸ், ராபர்டோ பாடிஸ்டா அகுத், பாப்லோ கரெனோ புஸ்டா, மார்செல் கிரானோலர்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

* இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் மொகிந்தர் அமர்நாத் நேற்று தனது 74வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். 1983ல் உலக கோப்பையை வென்று சாதனை படைத்த கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்ற மொகிந்தர் மொத்தம் 174 சர்வதேச போட்டிகளில் 6,302 ரன் மற்றும் 78 விக்கெட் எடுத்துள்ளார்.

* தேசிய அளவில் 21 பள்ளி அணிகள் பங்கேற்கும் யு-19 கால்பந்து போட்டி ஜெய்பூரில் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் இருந்து கொடைக்கானல் சர்வதேச பள்ளி அணி இத்தொடரில் களமிறங்குகிறது.

* இந்தியா – இங்கிலாந்து மோதும் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூலை 10ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணம் எக்கச்சக்கமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

* நியூசிலாந்து மகளிர் அணியுடன் பிரிஸ்பேனில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. நியூசிலாந்து 20 ஓவரில் 146/6; ஆஸ்திரேலியா 19.1 ஓவரில் 148/5.

* நியூசிலாந்து அணியுடன் காலே மைதானத்தில் நாளை தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் புதுமுக ஸ்பின்னர் நிஷான் பெய்ரிஸ் (27 வயது) சேர்க்கப்பட்டுள்ளார்.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Related Stories: