கை, கால் நடுக்கம் இப்ப இல்ல: விஷால் உருக்கம்

சென்னை: சுந்தர்.சி இயக்கிய ‘மதகஜராஜா’ படத்தின் புரமோஷனில் பங்கேற்றபோது விஷாலின் தோற்றம், கை மற்றும் கால்களில் ஏற்பட்ட நடுக்கம் அனைவரையும் அதிர வைத்தது. மேடையில் பேசிய அவர், மைக் பிடிக்க முடியாமல் நடுங்கினார். மேடையிலுள்ள நாற்காலியில் அமர வைக்கப்பட்ட விஷாலுக்கு வைரல் காய்ச்சல் இருப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து ேசாஷியல் மீடியா, யூடியூப், இணையதளங்களில் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ‘மதகஜராஜா’ படத்தின் ஸ்பெஷல் காட்சியை திரையிட்டிருந்தனர். அப்போது தனது உடல்நிலை குறித்து விஷால் உருக்கமாக பேசினார். அது வருமாறு: அன்று எனக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு இருந்த காரணத்தால் எனது கை, கால்கள் நடுங்கியது.

என் பெற்றோர் கூட, ‘இந்த நிலையில் இருந்து வரும் நீ, அந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம்’ என்று தடுத்தனர். என்றாலும், சுந்தர்.சி மற்றும் 13 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் ‘மதகஜராஜா’ படத்துக்காகவே வந்து பங்கேற்றேன். என் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல் களும், வதந்திகளும் வெளியாகி வந்த நிலையில், என் ரசிகர்கள் மற்றும் எனது நலம்விரும்பிகள் என்மீது காட்டிய அன்பு மற்றும் அக்கறையை பார்த்து நான் கண்கலங்கி விட்டேன். நான் சாகும் வரை நீங்கள் காட்டிய அன்பை மறக்க மாட்டேன். எனது தந்தையின் தன்னம் பிக்கைதான் எனக்கான பலம். இப்போது நடுக்கம் இல்லை. மைக் கரெக்ட்டாக இருக்கிறது. நான் நலமாக இருக்கிறேன். தொடர்ந்து படப்பிடிப்புக்கு செல்வேன். ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நான் பேசிய மாதிரி, ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? நான் விழவும் மாட்டேன்… விடவும் மாட்டேன்…’ என்பதை மீண்டும் சொல்கிறேன்.

 

Related Stories: