சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு? அமெரிக்காவில் ஆபரேஷன்

பெங்களூரு: கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோ சிவ ராஜ்குமார். அவர் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருந்தார். தனுஷ் உடன் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் நடித்து இருக்கிறார். விஜய்யின் 69வது படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க அவரை முதலில் ஹெச்.வினோத் அணுகியதாகவும் தகவல் வந்தது. ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என மறுத்து இருந்தார். இதற்கிடையே சில வாரங்களுக்கு முன் தனக்கு உடல் நலன் பாதித்துள்ளதாக சிவராஜ்குமார் கூறினார். இதற்கு சிகிச்சை பெற அவர் அமெரிக்காவும் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக இந்தியாவிலேயே சிகிச்சை பெற்ற அவர், அறுவை சிகிச்சைக்காகவே அமெரிக்காவுக்கு தற்போது சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் குணமாகி விரைவில் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related Stories: